வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் மாணவர்களுக்கு வாசிப்பு மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது
வி.களத்தூர் ஐடியல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியும் கிளை நூலகமும் இணைந்து இன்று மாலை ஐடியல்பள்ளியில் மாணவர்களுக்கு வாசிப்புத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடத்தியது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார். தாளாளர் மஹஸர்அலி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை பள்ளியின் நிர்வாக இயக்குநர் கமால் பாஷா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம், நூல்களை பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் நூலகத்தை பயன்படுத்த வேண்டியதன் தேவை குறித்தும் விரிவாக பேசினார்.
வி.களத்தூர் கிளை நூலகர் ஷோபனா, நூலகத்தில் உறுப்பினராக விரும்புபவர்கள் செய்ய வேண்டிய நடைமுறை குறித்து மாணவர்களிடம் விரிவாக பேசினார்.
அரும்பாவூர் தாஹிர்பாஷா மாணவர்களுக்கு கதைவடிவில் கருத்துக்களை எடுத்துரைத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
மாணவர்களின் சார்பில் மாணவி இலக்கியா நன்றியுரை கூறினார்.
முன்னதாக இன்று காலையில் கிளை நூலகத்திற்கு மாணவர்கள் சென்று தங்களுக்குப்பிடித்தநூல்களை தேர்வு செய்து வாசித்தனர்