பெரம்பலூர் : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் 54 வது பிறந்த நாளை முன்னிட்டு திருமாந்துறை ஒன்றிய கவுன்சிலர் சார்பில் திருமாந்துறை அரசு நடுநிலைப்பள்ளி, டி.இ.எல்.சி துவக்கப்பள்ளி, எமிலி மழையர் பள்ளி, கிரனூர் ஏ.எல்.சி ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பேன்சில் மற்றும் கணித வரைபட கருவி பெட்டி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருமாந்துறை ஒன்றிய கவுன்சிலர் இளையராஜா தலைமை வகித்து 1200 மாணவ மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பேன்சில் வழங்கினார். நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் வீரசெங்கோலன்,மாநில கருத்தியல் பரப்பு செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி, மாவட்ட வணிகர் அணி அமைப்பாளர் முத்து செங்கோலன், மாணவர் அணி நிர்வாகிகள் முரளி, தாஸ், ராஜேஷ்ராவ், வேப்பூர் ஒன்றிய செயலாளர்,கதிர்வாணன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்