பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெங்கனூர் விருத்தாஜலேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானின் மஹா ஆருத்திராதரிசன அபிஷேகம் நாளை சனிக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜேந்திரன், உபயதாரர் தங்கவேல் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.