மழைப் பொழிவின் அடிப்படையில் வெள்ளம் சூழும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கும் டி.என்.ஸ்மார்ட் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதுஇதன் மூலம் அவசரகால மீட்பு நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய மண்டலத்தின் ஒருங்கிணைந்த பலவகை பேரிடர் முன்னறிவிப்பு அமைப்பின் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள தாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கான வான் வழி புகைப்படவியல் ஆய்வை ஆளில்லா வானூர்தி மூலம் மேற்கொள்ளும் திட்டத்துக்காக தமிழக அரசு 701 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், இந்த திட்டம் சென்னை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்து செயல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.