பெரம்பலூர் : கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் வரும் ஜுலை 14ம் தேதி (செவ்வாய்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
இதில் வெள்ளாடு வளர்ப்பு, உயர் இன மற்றும் கலப்பின வெள்ளாடு , வெள்ளாடுகளுக்கான தீவன மேலாண்மை, வெள்ளாடு கொட்டகை அமைக்கும் முறை, வெள்ளாடுகளை பராமரிக்கும் முறை, நோய் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் நாளை காலை 10 மணிக்கு மேல் கால்நடை மருத்துவ பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு நேரிலோஅல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து, கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மேலும் விபரகள் அறிந்து கொள்ள 04328- 224599 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.