பெரம்பலுார் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், மலையாளப்பட்டியில் சின்னமுட்லு அணை கட்ட வேண்டும், விவசாயிகள் வாங்கிய பயிர்கடனை மத்திய, அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்.
கல்லாற்றின் குறுக்கே வெண்பாவூர், கிருஷ்ணாபுரம், வி.களத்துார், பாண்டகப்பாடி, தொண்டமாந்துறை ஆகிய இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும், கரும்பு டன்னுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும், விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருப்போருக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பெரம்பலுாரில் நாமம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சின்ராசு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் விசுவநாதன் கலந்து கொண்டு பேசினார். முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் நேர்முக அலுவலர் மாரிமுத்துவிடம் மனு கொடுத்தனர்.