பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு இரு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள கோவிந்தராஜபட்டினத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் கோவிந்தராஜ் (48). இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்னையால் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, தொடர்ந்து வலி ஏற்பட்டதால் அவதியுற்ற கோவிந்தராஜ் நேற்று திங்கள்கிழமை இரவு விஷம் குடித்தார். பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவிந்தராஜ் இன்று உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விஷம் குடித்து இளைஞர் சாவு:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வண்ணாரம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ரகுராம் (21). இவருக்கு, கடந்த சில மாதங்களாக திருமணத்துக்காக பெண் பார்த்து வந்தும் நிச்சயமாகவில்லை. இதனால் மனமுடைந்த ரகுராம் நேற்று திங்கள்கிழமை மாலை விஷம் குடித்தார். பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வி.களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.