பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தீக்குளித்ததால் இன்று உயிரிழந்தனர்.
ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம்:
பெரம்பலூர்- ஆலம்பாடி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் துரைசாமி (43). இவர், ரியல் எஸ்டேட் தரகராகவும், நிலம் வாங்கி விற்பனை செய்யும் தொழிலையும் செய்த வந்தார். இந்நிலையில், அவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த துரைசாமி, நேற்று இரவு அவரது வீட்டிலிருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
குடும்பத் தகராறு:
இதேபோல, பெரம்பலூர் அருகேயுள்ள கவுள்பாயைம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லுசாமி மகன் உதயக்குமார் (35). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில், இன்று ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த உதயக்குமார் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த, இரு வெவ்வேறு சம்பவங்கள் குறித்து புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.