பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் முதியவர் உள்பட 2 பேர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், காரை கிராமத்தை சேர்ந்தவர் சி. கிருஷ்ணசாமி (90). கடந்த சில மாதங்களாக உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்த இவர், பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லையாம்.
இதனால் மனமுடைந்த கிருஷ்ணசாமி, திங்கள்கிழமை இரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், மொடக்குழி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் மகன் தர்மையன் (55). இவர், பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகேயுள்ள தனியாருக்கு சொந்தமான கிரஷரில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவுசாலை அருகேயுள்ள பாலத்தின் மேல் மது போதையில் அமர்ந்திருந்தாராம். அப்போது, தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் அவரது உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.