01-election-commission-of-india பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் க.நந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுபவர்கள் தங்களது வேட்புமனுக்களை 22.4.2016 முதல் 29.4.2016 வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகள் உள்ளன்.

இதில் பெரம்பலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக வருவாய்க் கோட்டாட்சியரும்,

குன்னம் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக சம்மந்தபட்ட வட்டாட்சியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும்,

குன்னம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபர்கள் குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

ஏப்.22. முதல் ஏப்.29 வரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, ஒவ்வொரு வேட்பாளரும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்கு விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும்.

தேர்தல் நடத்தும் அலுவலரது அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்யவரும் வேட்பாளர் அலுவலக வளாக 100 மீட்டர் சுற்றளவிற்குள் அவரது சார்பாக 3 வாகனங்களில் வேட்பாளர் உட்பட 5 (1+4) நபர்களை மட்டும் அழைத்துக்கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர்.

இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள் ரிக்‌ஷா ஆகியன ”வாகனங்கள்” என்ற வரையறைக்குள் உட்பட்டதாகும். ஒலிபெருக்கிகளை உபயோகிக்க அனுமதியில்லை. மேற்சொன்ன விதியினை மீறி வரப்பெறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் முடியும்வரை விடுவிக்கப்படமாட்டாது.

வேட்பு மனுவுடன் படிவம்-26ல் கண்டுள்ள விவரங்களை உறுதிமொழி ஆவணமாக தாக்கல் செய்யவேண்டும். இதில் கோரப்பட்ட விவரங்களை விடுபாடின்றி பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவேண்டும்.

தேர்தல் நடத்தும் அலுவலரால் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்ட பின்பு தாக்கல் செய்யப்படும் ஆவணத்தில் குறைபாடு காணப்படின் வேட்பு மனுவினை தள்ளுபடி செய்ய நேரிடும்.

வேட்பு மனு தாக்கல் செய்யும்பொழுது வேட்பு மனுவுடன் வழக்கம் போல் தாக்கல் செய்யும் உறுதிமொழி ஆவணத்துடன் கூடுதலாக அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பாக்கி ஏதுமில்லை என்ற சான்றினை தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள படிவத்தில் கூடுதலாக மற்றுறொரு உறுதிமொழி பத்திரத்தினையும் தாக்கல் செய்யப்படவேண்டும்.

வேட்பாளரின் புகைப்படத்தை வாக்குச்சீட்டில் அச்சிட வேண்டியுள்ளதால் வேட்பாளர் தனது மூன்று மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட 3செமீ x 2.5செமீ அளவுள்ள கடவுச்சீட்டு அளவு கொண்ட கலர் அல்லது கருப்பு வெள்ளை புகைப்படத்தை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுக்கப்பட வேண்டும்.

வேட்புமனு தாக்கல் செய்வது குறித்த வேட்பாளர்களின் சந்தேககங்களை நிவர்த்தி செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்தில் துணை ஆட்சியர்கள் நியமிக்கப்படுவர்.

வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது மேற்சொன்ன விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவேண்டும், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!