வேப்பந்தட்டையில் டெங்கு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது துவக்கி வைத்தார்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் பொதுசுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறைகளின் சார்பில் இன்று டெங்கு நோய் குறித்த தகவல்களையும், பாதுகாப்பு வழிகளையும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளிடம் பேசியதாவது:
தற்போது மழைகாலமாக இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் தண்ணீரை காய்ச்சி ஆரவைத்து குடிக்கவேண்டும். வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டி, மற்றும் பாத்திரங்களை 3 நாட்களுக்கு ஒருமுறை பிளீச்சிங்பவுடர் கொண்டு சுத்தம் செய்து பராமரிக்கவேண்டும்.
குடங்களில், தொட்டிகளில் இருக்கும் தண்ணீரை மூடிவைத்து பராமரிக்க வேண்டும். மேலும் வீட்டின் அருகே மழைநீர் தேங்காதவாறும், உரல், பழைய டயர், தேங்காய் ஓடுகள் மற்றும் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொளள வேண்டும். பொதுமக்கள் யாருக்காவது காய்ச்சல் என்றால் மருத்துவரின் உரிய பரிந்துரை இல்லாமல் கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிடுவதையும், போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதையும் தவிர்க்க வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு மட்டுமின்றி அனைத்து வகையான காய்ச்சலுக்கும் தேவையான மருத்துவ வசதிகள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் தயார; நிலையில் உள்ளது.
டெங்கு காய்ச்சலுக்கு இரத்த பரிசோதனை வசதி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் காய்ச்சல் என்றால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். டெங்குவைத் தடுக்க அரசு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டாலும், பொதுமக்களாகி உங்களின் பங்களிப்பும் மிக அவசியம். எனவே, அனைவரும் என்று கேட்டுக்கொன்கின்றேன்.
இவ்வாறு பேசினார்.
பேரணியில் வேப்பந்தட்டை அரசுமேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு டெங்கு விழிப்புணர்வு வாசகங்களை கோசமிட்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
ஆசிரியர் பெருமக்கள், அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்