பெரம்பலூர் : வேப்பந்தட்டை பருத்தி ஆராய்சி மையத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பாக உழவர்களுக்கு வெங்காயம் சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியை தோட்டக்கலைதுறை துணை இயக்குநர் (பொ) இந்திரா துவங்கி வைத்தார். வேப்பந்தட்டை தோட்டக்கலை துறை அலுவலர் ஆனந்தன் வரவேற்றார்.
பருத்தி ஆராய்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் கவிமணி , தொழில்நுட்ப பயிற்றுநர் கதிரவன், உதவி பேராசிரியர், கல்பனா ஆகியோர் நவீன சாகுபடி குறித்த தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார்கள்.
பயிற்சியில் நிலம் தயார் செய்வது, நடவு, நீர் பாசனம, உரமிடுவது மற்றும் களை, பூச்சி , நோய் கட்டுப்பாடு,
விதை மூலம் சிறிய வெங்காயம் சாகுபடி, பெல்லாரி வெங்காயம் சாகுபடி பற்றிய தொழில்நுணுக்கங்கள் உழவர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்கப்ட்டது.
வேப்பந்தட்டை சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளான கிராம உழவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். உழவர்களை, உதவி வேளாண்மை அலுவலர்கள் வீராசாமி, மூர்த்தி ஆகியோர் ஒருங்கினைப்பு செய்திருந்தனர்.