பெரம்பலூர் : வேப்பந்தட்டை வேதமாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் திருவிழா கடந்த வெள்ளிக் கிழமை சுவாமி குடியழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து இன்று வேதமாரியம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில் வளாகத்திலிருந்து புறப்பட்ட பால்குடம் ஊர்வலம் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் கோவிலை வந்தடைந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வேப்பிலையுடன் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பாலைக்கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிக்கும்பிட்டனர்.
நாளை ( திங்கள் கிழமை ) அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் மற்றும் பொங்கல் வைத்து மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய் கிழமை ) அடைக்கலம் காத்தவர் சுவாமி கோவிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.