பெரம்பலூர்: வேப்பந்தட்டையில் மர்ம விலங்கு கடித்து குதறி கொன்றதில் 22 ஆட்டு குட்டிகள் ஆடுகள் பலியாகின.
வேப்பந்தட்டையை சேர்ந்தவர் பொன்ராமன் மகன் கிருஷ்ணசாமி (55). கால்நடை மருத்துவமனை அருகே ஆட்டுப்பண்ணை நடத்தி வருகிறார். அதில் 22 ஆட்டு குட்டிகள், 30 ஆடுகள் இருந்தது.
இதனை நேற்று இரவு மர்ம விலங்கு கடித்து குதறியதில் கொட்டிலில் அடைக்கப்ட்டிருந்த 22 ஆட்டு குட்டிகள் இறந்தன. வலைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 30 ஆடுகள் உயிர் தப்பின.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர். வேப்பந்தட்டை வட்டாச்சியர் தமிழ்ச்செல்வன், வேப்பந்தட்டை ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் நேரில் சென்று ஆட்டுப்பட்டி உரிமையாளர் கிருஷ்ணசாமிக்கு ஆறுதல் கூறினர்.
வேப்பந்தட்டை கால்நடை மருத்துவர் மர்ம விலங்கால் இறந்த ஆடுகுட்டிகளை உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.
வனத்துறையினர் மர்ம விலங்கை கண்டுபிடிக்க தடங்களை சேகரித்து வருகின்றனர்.
இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.