பெரம்பலூர் : வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி இயங்கி வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்தவுடன் மாணவ-மாணவியர்கள் பஸ் நிறுத்தம் வந்தனர். அப்போது மாணவர்களுக்குள் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது.
அப்போது அங்கு வந்த தனிப்பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சபியுல்லா மாணவர்களிடம் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.