பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி துறைத்தலைவர்கள் நீலமேகம், ராமராஜ், அன்பழகன், சுதா ஆகியோர் கலந்து கொண்டு மனித உரிமைகள் குறித்து பேசினார்கள். இதில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவன் கலைராஜா வரவேற்று பேசினார். முடிவில் கதிரேசன் நன்றி கூறினார்.