பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடிக்க முயற்சித்தது இன்று அதிகாலையில் தெரியவந்தது.
வேப்பந்தட்டை அருகேயுள்ள அன்னமங்கலம் கிராமம், வடக்குத் தெருவை சேர்ந்தவர் செல்லபெருமாள் மகன் ராமன் (40). இவர், அவரது வீட்டின் அருகே மற்றொரு வீடு கட்டி வருவதால் நேற்றிரவு அங்கு தூங்கிகொண்டிருந்தார்.
இதையறிந்த மர்ம நபர்கள் சிலர் அவரது வீட்டின் பூட்டை உடைத்து, அங்கிருந்த ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்களை திருடிச்சென்றனர். இதேபோல, அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மனைவி ராணியின் (42) வீட்டை உடைத்து, அங்கிருந்த ரூ. 80ஐ திருடிச்சென்றனர். மேலும், பெருமாள் மனைவி கண்ணம்மாள் (60), வீரன் மனைவி செல்லம்மாள் (60) ஆகியோரது வீடுகளிலும் பூட்டை உடைத்து, கொள்ளையடிக்க முயற்சித்தது இன்று காலை தெரியவந்தது.
இதுகுறித்து மேற்கண்ட நான்கு பேரும் அளித்த புகாரின் பேரில், அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.