பெரம்பலூர் : வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூரை சேர்ந்தவர் முதலி . இவரது மகள் வினோதினி (வயது 20).
இவர் 10 வகுப்பு படித்து முடித்து விட்டு கடந்த சில வருடங்களாக வீட்டில் இருந்து பெற்றோருக்கு உதவியாக விவசாயம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் வினோதினி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து கடைக்கு மளிகை பொருள் வாங்குவதற்காக சென்றவர் மறுபடியும் வீடு திரும்பவில்லை.
வினோதினியை அவரது தந்தை முதலி உறவினர்களின் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக முதலி கை.களத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண் வினோதினியை தீவிரமாக தேடி வருகிறார்.