பெரம்பலூர் : வேப்பந்தட்டையை அருகே உள்ள பாண்டகப்பாடியை சேர்ந்தவர் சண்முகம் மனைவி கலையரசி (வயது30). விவசாயியான இவர் அதே ஊரை சேர்ந்த ராமசாமி என்பவரது விவசாய நிலத்தை குத்தகை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மாலை வயலில் கலையரசி மின் மோட்டாரை இயக்குவதற்காக கிணற்றின் அருகில் சென்றுள்ளார். அப்போது கவனக் குறைவால் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.
கிணற்றில் விழுந்த கலையரசி அலறினார். அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வயலில் வேலை செய்தவர்கள் ஓடி வந்து சாதுர்யமாக கயிறு ஒன்றை தூக்கி கிணற்றுக்குள் போட்டு காமாட்சியை பிடித்துக்கொள்ள செய்தனர்.
பின்னர் பெரம்பலூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து பத்திரமாக மீட்டனர்.
காமாட்சி கிணற்றில் விழுந்ததில் காயம் ஏற்பட்டதால் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.