பெரம்பலூர்: வேப்பநதட்டை அருகே உள்ள விசுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சக்திவேல் (28),
இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன் ரேணுகா(23), என்பவருடன் திருமணம் நடந்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து சக்திவேல் வேலைக்கு ஏதும் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து ரேணுகாவிடம் குடும்பத்தகராறில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த சக்திவேல் ரேணுகாவிடம் மேலும் குடிப்பதற்கு பணம் தருமாறு கேட்டுள்ளார்.
இதற்கு ரேணுகா மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து கோபித்துக்கொண்டு சென்றவர் இன்று காலை 7 மணியளவில் அதே பகுதியில் உள்ள வயல் பகுதியில் உள்ள வாகை மரத்தில் சக்திவேல் தூக்கில் தொங்கி நிலையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து சக்திவேலின் மனைவி ரேணுகா கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் எஸ்.எஸ்.ஐ., சண்முகம் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.