பெரம்பலூர் : வேப்பந்தட்டை அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை அவரது மாமன் அறிவாளால் வெட்டினார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள மாவிலங்கை கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சுதாகர் (21). இவர் தனது தாய் மாமனும், அக்காவின் கணவருமான அதே ஊரைச் சேர்ந்த அசோகன்(38) என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவசர தேவைக்காக பணம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று ஆடி பெருகக்கு விழாவையொட்டி இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். அப்போது அசோகனிடம் சுதாகர் பணம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அசோகன் அறிவாளால் சுதாகரை வெட்டியுள்ளார். அதனை தடுத்த சுதாகரின் இடது கையில்
பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சுதாகரை அவரது ஊறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோகனை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!