பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ளது அனுக்கூர் கிராமம். அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசின் விலையில்லா லேப்டாப்புகள் (மடிக்கணனிகள்) கொண்டு வந்து, ஓர் அறையில் பூட்டி வைக்கப்ட்டிருந்தது.
நேற்று பள்ளிக்குள புகுந்த மர்ம நபர்கள், அறையின் பூட்டை உடைத்து 5 லேப்டாப்கள் எடுத்து சென்றுள்ளளனர். பள்ளி விடுமுறை என்பதால் யாருக்கும் தெரியவில்லை. அப்பகுதியில் இன்று ஆடு, மாடு மேய்க்க சென்றவர்கள் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு சிதறி கிடப்பதை கண்டு ஊருக்குள் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த பள்ளியின் தலைமையாசிரியர் சிவசாமி பார்வையிட்டு மங்கலமேடு போலீசில் புகார் அளித்தார். இது குறித்த புகாரின் பேரில் மங்கலமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
லேப்டாப்களை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்கள் போலீஸ் நாய் மோப்பம் பிடிக்காத வகையில் மிளகாய் பொடி தூவி சென்றனர். கொள்ளையடித்து சென்ற லேப்டாப் மதிப்பு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருக்குமென கூறப்படுகிறது.