பெரம்பலூர் : வேப்பந்தட்டையை அடுத்துள்ள திருவாலந்துறையில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வாளாடியை சேர்ந்த ஜேசுதாஸ் மகன் சௌந்திரராஜன் (வயது 48) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் ஆசிரியர் சௌந்திரராஜன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் தகவல் கொடுத்ததையடுத்து பெற்றோர்கள் பள்ளி தலைமையாசிரியர் குழந்தைதெரசாவிடம் புகார் தெரிவித்தனர்.
உடனடியாக பள்ளி தலைமையாசிரியர் விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் சௌந்திரராஜனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் இது தொடர்பாக வி.களத்தூர் போலீசிலும் தலைமையாசிரியர் குழந்தைதெரசா புகார் கொடுத்தார். புகாரையடுத்து சப் இன்ஸ்பெக்டர் விவேக் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆசிரியர் சவுந்திரராஜனை வலைவீசி தேடி வருகிறார்.