பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட கம்பன் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சுரேஷ்(30), இவர் இன்று விடுமுறை தினம் என்பதால் மனைவி பிரியா(30),மகன்கள் தமிழ்செல்வன்(14), சுப்ரமணி(12), மகள் மகேஷ்வரி(10) ஆகியோருடன் வேப்பந்தட்டை அருகே உள்ள விசுவகுடி நீர்தேக்கத்திற்கு சென்று குளித்துள்ளார்.
இதில் எதிர்பாரத விதமாக தண்ணீரில் மூழ்கிய சுரேஷை அங்கிருந்த சிலர் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சுரேஷை பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை ஏற்க மனமில்லாத சுரேஷின் உறவினர்கள் உயிர் இருக்கிறது என மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர், சுரேஷை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சுரேஷ் இறந்து போனது உறுதி செய்யப்பட்டது.