பெரம்பலூர் : வேப்பந்தட்டை அருகே விவசாயி வீட்டில் 3 பவுன் நகை மற்றும் ரூ. 11 ஆயிரம் ரொக்கத்தை பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து திருடி சென்றவர்களை போலீசார் தீவிமாக தேடி வருகின்றனர்.
வேப்பந்தட்டை அருகேயுள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன் மகன் தெல்ல அப்பு (42) விவசாயி. இவர், இன்று சனிக்கிழமை காலை விவசாய வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் புன்புற கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ. 11 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதேபோல, அதே பகுதியை சேர்ந்த அவரது சகோதரர் ரவி மனைவி சித்ரா (32) வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து தெல்ல அப்பு அளித்த புகாரின்பேரில், அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிந்து பட்டப்ப பகலில் திருடிய திருடனை தேடி வருகின்றனர்.