பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பிம்பலூரில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகிறது. இந்நிலையில் இன்று சில நாய்களுக்கு திடீரென வெறிப்பிடித்து பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்து குதறியது.
அப்போது பிம்பலூரை சேர்ந்த அய்யம்பெருமாள்(வயது70), உத்தகண்டி(63), சேகா;(46), மோகனாம்பாள்(33), ரஞ்சுதம்(25), மஞ்சு(27), பொட்டு(50), ராமாயி (60), அறிவழகி(20) ஆகிய 9 பேர்களையும் வெறிநாய் கடித்துள்ளது.
இதில் காயமடைந்த அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தொடர்ந்து அந்த பகுதிகளில் வெறிநாய்கள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர். எனவே அவ்வூர் வீதிகளில் சுற்றி வரும் நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.