பெரம்பலூர் : வேப்பந்தட்டை வட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ரூ.12.31 கோடி மதிப்பில் பல்வேறு வகையான மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
வி.களத்தூர் பகுதியில் திருவாளந்துறையிலிருந்து – திருவாளந்துறை கோவில் வரை 1.6 கி.மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டு வரும் சாலைப்பணிகளை இன்று மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
நடப்பாண்டில் நபார்டு திட்டத்தின் மூலம் திருவாளந்துரை முதல் திருவாளந்துரை கோவில் சாலை வரை உள்ள 1.6 கி.மீ நீளமுள்ள சாலை ரூ.44.38 இலட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது.
பிரம்மதேசம் முதல் எசனை வரையுள்ள 3 கி.மீ நீளமுள்ள சாலை ரூ.46.08 இலட்சம் செலவில் பணிகள் முடிவுற்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பேருந்து வழித்தட சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக கிருஷ்ணாபுரம் முதல் அன்னமங்கலம் வரையிலான 4.85 கி.மீ நீளமுள்ள சாலை ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கிராமச்சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் மூலமாக அனுக்கூர் குடிகாடு முதல் வடக்குமாதவி வரையிலான 2.7 கி.மீ நீளமுள்ள சாலை ரூ.32 இலட்சம் மதிப்பீட்டிலும், வேப்பந்தட்டை முதல் அன்னமங்கலம் வரை 1.2 கி.மீட்டர் நீளமுள்ள சாலை பணிகள் ரூ.9.7 இலட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மாநில உள்கட்டமைப்பு வசதிமேம்பாட்டுதிட்டத்தின் மூலம் வெள்ளுவாடி முதல் சோலைநகர் வரையிலான 800 மீட்டர் சாலை மற்றும் மேம்பால பணிகள் ரூ.1.72 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. மேலும் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் வெள்ளுவாடி முதல் சோலைநகர் வரையிலான 1 கி.மீ நீளமுள்ள சாலை ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலும்,
இனாம் அகரம் முதல் தைக்கல் வரையிலான 1.9 கி.மீ நீளசாலை ரூ.62.74 இலட்சம் மதிப்பீட்டிலும், பாண்டகப்பாடி முதல் மாவிலங்கை வரையிலான சாலை 1 கி.மீ நீளமுள்ள சாலை ரூ.10.77 இலட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பாரதபிரதமரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் மூலமாக அரும்பாவூர் முதல் சின்னமுட்லு வரையிலான 2 கி.மீ சாலை ரூ.95.45 இலட்சம் மதிப்பிலும், அ.மேட்டூர; முதல் கோரையாறு வரையிலான 7.2 கி.மீ நீளசாலை ரூ.1.59 கோடி மதிப்பீட்டிலும்,
வாலிகண்டபுரம் முதல் சிறுகுடல் வரையிலான 3.4 கி.மீ நீளமுள்ள சாலை ரூ.75.85 இலட்சம் மதிப்பீட்டிலும்,
சென்னை பிராதான சாலை முதல் பிரம்மதேசம் வரையிலான 0.9 கி.மீ நீளமுள்ள சாலை ரூ.31.4 இலட்சம் மதிப்பீட்டிலும்,
தொண்டமாந்துறை முதல் தழுதாழை வரையிலான 1.87 கி.மீ நீளசாலை ரூ.60.96 இலட்சம் மதிப்பீட்டிலும்,
பெரிய வடகரை முதல் பாண்டகப்பாடி வரையிலான 2.75 கி.மீ நீளமுள்ள சாலை ரூ.65.88 இலட்சம் மதிப்பிலும், கை.களத்தூர் முதல் அய்யனார்பாளையம் வரையிலான 6 கி.மீ நீளசாலை ரூ.212.64 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூபாய் 12 கோடியே 31 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் மற்றும் முடிவுற்ற சாலைப்பணிகளால் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள குக்கிராமங்களும் மாவட்ட தலைநகரம் மற்றும் முக்கிய பகுதிகளுடன் விரைவான சாலை போக்குவரத்து வசதிகளை பெறமுடியும்.
இதன் மூலமாக கிராமப்புறங்களில் உள்ள விவசாய உற்பத்தி பொருட்களை நகர;ப்புறங்களுக்கு விரைவாக கொண்டு செல்வதுடன், நேர விரயமும, பொருள் விரயமும்; வெகுவாக குறைந்து கிராம பொருளாதாரம் வெகுவாக உயரும். இவ்வாறு தெரிவித்தார். அப்போது உதவி செயற்பொறியாளர் மதியழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.