பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் இரா.தமிழ்செல்வன் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாலிகண்டபுரம் கிராமத்தில் தனது பிரச்சாரத்தை துவங்கிய வேட்பாளர் இரா.தமிழ்செல்வன் வாலிகண்டபுரம், தம்பை தேவையூர், கிருஷ்ணாபுரம், வெங்கலம், தழுதாழை, தாழைநகர் ஆகிய கிராமங்களில் வீதி, வீதியாக நடந்தும், வாகனத்தில் சென்றும் பொது மக்கள் மற்றும் முதியவர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..
பிரச்சாரத்தின் போது, அதிமுக அரசின் 5 ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேசிய வேட்பாளர் ஆலத்தூர் ஒன்றியத்தில் கடந்த 5 ஆண்டு கால பல சிறப்பு திட்டங்களாக அரசு கல்லூரி, விசுவகுடி நீர்த்தேக்கம், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் முன் வைத்த குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளை செயல்படுத்தி உள்ளதாகவும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தால் உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றுவேன் என்றும் உறுதியளித்து வாக்கு கேட்டு பேசினார்.
இந்த பிரச்சாரத்தின் போது முன்னாள் ஒன்றிய செயலாளர் பூவராகசாமி, உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளருக்கு கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட அந்தந்த பகுதி பொது மக்கள் வெடி வெடித்தும்,சால்வை அணிவித்தும், நடனமாடியும், ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.