பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் தி.மு.க ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் நல்லதம்பி வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சரும் தேர்தல் பொறுப்பாளருமான கே.என்.நேரு, மாவட்ட செயலாளார் ராஜேந்திரன், மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டா; வல்லபன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவிஜெயபால் மற்றும் பலர் பேசினார்கள்.
கூட்டத்தில் வரும் சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெரும் வகையில் தேர்தல் களப்பணியாற்றுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் வேப்பந்தட்டை ஊராட்சி கழக செயலாளர் அழகுவேல் நன்றி கூறினார்.