பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் வரும் நவ.17ல் தேமுதிகவின் “மக்களுக்காக மக்கள் பணி” திட்டத்தின் சார்பாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா கலந்துகொண்டு “இணையதள முகவர்களுக்கு” கணினி உபகரணம் நல உதவிகள் வழங்குதல், மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து வேப்பூர் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வேப்பூர் ஒன்றிய செயலாளர் மலர்மன்னன் தலைமையில் வேப்பூர் கிராமத்தில் நடைபெற்றது.
வேப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டதிற்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோரை வரவேற்பது குறித்தும் மக்களுகாக மக்கள்பணி திட்டத்தை எவ்வாறு நடத்துவது ,தொண்டர்கள் அதிகபடியான மகளிரையும் ,மக்களையும் அழைத்து வருவது குறித்தும் மற்றும் நலத்திட்டங்கள் வழங்குவது குறித்தும் கூட்டதில் ஆலோசிக்கப்பட்டது .
இக்கூட்டதிற்கு குறைந்தது பத்தாயிரம் மக்களை கவரும் விதமாக கிராமங்கள் தோறும் சுவர் விளம்பரம்,டிஜிட்டல் பேனர் வைத்து ஒவ்வொரு வீட்டிற்க்கும் அழைப்பிதழை கொடுத்து கூட்டத்தில் கலந்து கொள்ள வைப்பது குறித்தும் மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவை தலைவர் கணபதி, மாவட்ட பொருளாளர் சீனி.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் கண்ணுசாமி பொதுகுழு உறுப்பினர் ரவிக்குமார், மனோகரன், கேப்டன் மன்ற செயல,செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வைரமணி ராஜேந்திரன்,கோமதி,மாவட்ட தொண்டரணி புனிதராஜ்,இளங்கோவன் , விவசாய அணி கிருஷ்ணசாமி ,தொழிற்சங்க செயலாளர் சேகர், முருகேசன், சரவணன், மணிமாறன், சுரேஷ், லப்பைகுடிக்காடு பேரூர் செயலாளர் கமால்பாட்ஷா, வேப்பூர், ஒன்றிய நிர்வாகிகள் வரதராஜ், செந்தில்குமார், கருப்பையா, அண்ணாதுரை, முத்துசாமி,கோவிந்தராஜ், மதியழகன்,கோவிந்தன், செந்தில், வெங்கடேஷ், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் ,கிளை கழக,மகளிரணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.