பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தில் குன்னம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் இன்று கொத்தவாசலில் தனது பிரச்சாரத்தை துவக்கினார்.
பின்னர், வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் காடூர், நல்லறிக்கை, புதுகுடிசை, துணிச்சப்பாடி, கொளப்பாடி, புதுவேட்டக்குடி புதூர், புதுவேட்டக்குடி, கோவில் பாளையம், தேனூர், துங்கபுரம், கிளியப்பட்டு, காரைப்பாடி குன்னம் உட்பட 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக நடந்தும், பிரச்சார வாகனத்தில் சென்றும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட்டார்.
பிரச்சாரத்தின் போது, அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனைகள் மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கையை விளக்கி பேசி தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது வேப்பூர் ஒன்றிய செயலார் கிருஷ்ணசாமி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளருக்கு கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பொது மக்கள் வெடி வெடித்தும், சால்வை அணிவித்தும், ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.