விவசாயக் கடன், கல்விக் கடன் தள்ளுபடி பெற திமுக விற்கு வாக்களிக்க வேண்டும் என குன்னம் தொகுதி வேட்பாளர் த.துரைராஜ் வேப்பூர் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார்.
குன்னம் தொகுதி சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் த.துரைராஜ், வேப்பூர் ஒன்றியம், பனங்கூரில் வாக்கு சேகரிப்பை கட்சியினருடன் துவங்கினார்.
பின்னர், மருவத்தூர் மற்றும், பேரளி கிராமத்தில் பிரச்சாரம், மேற்கொண்ட அவர் அங்கு பேசியதாவது:
கல்விக்கடன், விவசாயக் கடன், மதுவிலக்கு அமல்படுத்துவதற்கும், விவசாயக் கடன், கல்விக் கடன், உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை உள்ளடக்கிய திமுக தேர்தல் அறிக்கையை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்.
பின்னர், சித்தளி, பீல்வாடி, அருமடல், கீழப்புலியூர், கே.கத்திரிக்காய் புதூர், எழுமூர், மழவராய நல்லூர், காருகுடி, ஆண்டிக்குரும்பலூர், ஆய்குடி, சின்ன பராவாய், பரவாய், நன்னை, அகரம், சாந்தநந்தம் ஆகிய கிராமங்களில் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பை மேற்கொண்டார்.
அப்போது பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன், வேப்பூர் ஒன்றிய செயலாளர் மதியழகன், வழக்கறிஞர் ஜெகநாதன், அமுதா ஸ்டோர்ஸ் அன்பழகன், முன்னாள் மாவட்ட செயலாளர் துரைசாமி, பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் படைகாத்து(பேரளி), மலர்வண்ணன்(சு.ஆடுதுறை), பேச்சாளர் பெருநற்கிள்ளி, வேப்பூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிரபாகரன் உள்பட ஏராளமான கட்சி பிரமுகர்கள் உடன்இருந்தனர்.