பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றித்தில் நடைபெற்று வரும் சாலை, பாலம் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் நாபார்டு திட்டம், கிராமச்சாலைகள் பராமரிப்புத் திட்டம், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், பாரதப் பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் , உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டம் உள்ளி;ட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள் மற்றும் ஊரக கட்டமைப்புகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி வேப்பூர் ஒன்றியத்தில் பாரத பிரதமரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் மூலமாக் 6 சாலைப்பணிகள் 14.975 கி.மீ நீளத்தில் ரூ.4.86 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நபார்டு திட்டத்தின் மூலமாக கடந்த நான்காண்டில் 8 சாலைப்பணிகள் சுமார; 48.16 கி.மீ நீளத்திற்கு ரூ.5.33 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவுபெற்றுள்ளது.
பேருந்து செல்லும் சாலை திட்டத்தின் மூலமாக 3 சாலைப்பணிகள் ரூ.2.507 கோடி மதிப்பீட்டிலும், தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுதிட்டத்தின் மூலமாக 5 சாலைப்பணிகள் 10.58 கி.மீ நீளத்திற்கு ரூ.292.2 இலட்சத்திலும், தாய்திட்டத்தின் சிறப்புசாலை திட்டத்தின் மூலமாக 4 சாலைப்பணிகள் 6.1 கி.மீ நீளத்திற்கு ரூ.143 இலட்சம் மதிப்பீட்டிலும், எஸ்.எப்.சி திட்டத்தில் 2.9 கி.மீ நீளமுள்ள சாலை ரூ.68 இலட்சம் மதிப்பீட்டிலும் சீரமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் மூலமாக வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் ரூ.1.56 கோடி மதிப்பீட்டிலும், குன்னம் ஊராட்சிமன்ற அலுவலகம் ரூ.10.85 இலட்சம் மதிப்பீட்டிலும் பணி நிறைவுபெற்றுள்ளது. வேப்பூர; பேருந்து நிலையம் ;ரூ.104 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டத்தின் மூலமாக வேப்பூர் மகளிர் கல்லூரியில் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் 10 வகுப்பறைகளும், ரூ.7.7 இலட்சம் மதிப்பீட்டில் விழா மேடையும், கல்லூரியை சுற்றி 437 மீ நீளத்திற்கு ரூ.3.50 இலட்சத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேப்பூர் ஒன்றியத்தில் கடந்த நான்காண்டுகளில் 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூ.189 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன். 26 அங்கன்வாடி மையங்கள் ரூ.116.5 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. குன்னம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் ரூ.13.5 இலட்சம் மதிப்பீட்டிலும், நிழற்குடை ரூ5.75 இலட்சம் மதிப்பீட்டிலும், பேரளியில் ரூ.8.1 இலட்சம் மதிப்பீட்டில் உண்டு உறைவிடப்பள்ளியும் கட்டப்படடுள்ளது.
மாநில உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி திட்டத்தின் மூலமாக 2 பால பணிகள் ரூ.183.4 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தாய் திட்டத்தின் மூலமாக 285 பணிகள் ரூ.540 இலட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டும், 42 பணிகள் ரூ.120 இலட்சம் மதிப்பீட்டில் மேற்பெகாள்ளப்பட்டு வருகின்றது.
மாநில சமச்சீர்வளர;ச்சி நிதி திட்டத்தில் 15 நெசவு கூடங்கள் ரூ.112 இலட்சம் மதிப்பீட்டில் பழுது நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் 2 விவசாய பயிற்சி கூடங்களும் என மொத்தம் வேப்பூர; ஒன்றியத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ40 கோடியே 46 இலட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள குக்கிராமங்களும் மாவட்ட தலைநகரம் மற்றும் முக்கிய பகுதிகளுடன் விரைவான சாலை போக்குவரத்து வசதிகளை பெறமுடியும்.
இதன் மூலமாக கிராமப்புறங்களில் உள்ள விவசாய உற்பத்தி பொருட்களை நகர்ப்புறங்களுக்கு விரைவாக கொண்டு செல்வதுடன், நேர விரயமும, பொருள் விரயமும் வெகுவாக குறைந்து கிராம பொருளாதாரம் வெகுவாக உயரும்.
இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது செயற்பொறியாளர் செல்வக்குமாரன், உதவிசெயற்பொறியாளர் மதியழகன், உதவிபொறியாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.