பெரம்பலூர் : தமிழக முதல்வர் அவர்களின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 93 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை சட்டமன்ற உறுப்பினர் இரா. தமிழ்செல்வன் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் மருதைராஜா வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம், வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரத்தில் தமிழக முதல்வரின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 93 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை பாராளுமன்ற உறுப்பினர் மருதைராஜா இன்று (19.9.2015) வழங்கினார்.
அதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பேசியதாவது:
தமிழகத்தின் கிராமப்புற மகளிரின் பொருளாதார நிலையினை உயர்த்திடவும், மகளிர் அமைப்பினை வலும்படுத்தவும் தமிழக முதல்வர், பொருளாதாரத்திதல் பின் தங்கி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற மகளிரை தேர்வு செய்து அவர்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் தமிழக கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் விலையில்லா ஆடுகளை பெற்ற பயனாளிகள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆடுகளை நக்கு பராமரித்து, அதன் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கி பயன்பெற வேண்டும்.
அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2011-12ம் நிதியாண்டு முதல் 2014 – 15முடிய 97 ஊராட்சிகளில் 6468 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ. 8 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரத்து 100- நிதியில் ஒரு பயனாளிக்கு 4 ஆடுகள் வீதம் 25 ஆயிரத்து 872 ஆடுகள் வாங்கி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் (2015-16) மீதமுள்ள 24 ஊராட்சிகளில் 1,752 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 31 லட்சத்து 26 ஆயிரத்து 400- நிதி ஒதுக்கீட்டில் விலையில்லா ஆடுகள் வழங்கப்படவுள்ளது, எனன தெரிவித்தார்.
இன்றைய நிகழ்ச்சியில் வேலூர் ஊராட்சிக்குப்பட்ட 93 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 80 ஆயிரம்400- மதிப்பீட்டிலான ஆடுகளை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் மருதைராஜா வழங்கினார்.
இவ்விழாவில் பெரம்பலூர் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை சிறப்பறிஞர் மருத்துவர் ப.மோகன், உதவி இயக்குநர் மருத்துவர். ம.மனோகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா துரைசாமி, ஊராட்சி மன்ற செயலர் பழனியாண்டி, மருத்துவர்கள் ஜவஹர், மூக்கன், மணிகண்டன், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.