பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
பெரம்பலூர் ; எஸ்.எஸ்.எல்.சி வகுப்பில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்பபு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் நபர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் நபர்கள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து ஐந்து வருடங்கள் முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 30.09.2010க்கு முன்னர் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாது தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள் 30.09.2015 தேதியில் 45 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மனுதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவஃமாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம்.
மனுதாரர் சுயமாக தொழில் செய்பவராகவோ சுயமாக சம்பாத்தியம் செய்பவராகவோ இருத்தல் கூடாது. புதிய விண்ணப்பப்படிவம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்த படிவங்கள் 30.11.2015 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00-மணி முதல் மதியம் 1.00-மணி வரை பெறப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மனுதாரா; விண்ணப்பப்படிவம் பெற்றுக் கொள்வதற்கு அனைத்து கல்வி சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் ஆவணங்களுடன் வருகை தர வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெறுபவர்கள் இந்த ஆண்டிற்கு சமர்ப்பிக்க வேண்டிய உறுதி மொழி ஆவணம் 30.11.2015க்குள் சமர்ப்பிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ்அஹமது தெரிவித்துள்ளார்.