பெரம்பலூர் : பெரம்பலூரில் வங்கி சார்பில் நிதிசார்ந்த விழிப்புணர்வு பயிலரங்கம் வாலிகண்டபுரத்தில் மத்திய அரசின் வேளாண்மை அறிவியல் மையத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நபார்டு வங்கி மாவட்டவளர்ச்சி மேலாளர் நவீன்குமார் தலைமை வகித்து பேசும்போது, பிரதம மந்திரியின் சிறப்பு திட்டமான ஜீவன்ஜோதி பீமயோஜனா மற்றும்பிரதமமந்திரி சுரக்ஷா பீமயோஜனா ஆகிய 2 காப்பீடு திட்டங்களும் அனைத்து குடும்பத்தினருக்கும் உதவிடும் வகையில் ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு (ரூ.2 லட்சம்வரை) திட்டத்தில் கிடைக்கும்.
அடல்பென்சன் யோஜனா 60 வயதுக்கு பிறகு வாழ்க்கை துணைக்கும் , அவருக்கு பிறகு வாரிசுகளுக்கும் கிடைக்கும் என்று என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்டமுன்னோடி வங்கி மேலாளர் அருள்தாசன் முன்னிலை வகித்தார். மேலும் பயிர் காப்பீடு சமூக பொருளாதாரம் மேம்பாடு சேமிப்பு மற்றும் நிதிபற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடந்தது. இதில் சுயஉதவிக்குழுவினர் மற்றும் கூட்டுபொறுப்புக்குழு பெண்களும், உழவர் மன்ற விவசாயிகளும் கலந்துகொ ண்டனர்.
இதில் வங்கி அதிகாரி சந்தோஷ்குமார் வேளாண்மை அறிவியல் மையம் சார்பில் விஜயலட்சுமி, உழவர் மன்ற விவசாயிகள் ஆறுமுகம், அய்யாக்கண்னு மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.