பெரம்பலூர் : ஒகளூர் கிராமத்தில் வேளாண் கருவிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஒகளூர் கிராமத்தில் வேளாண்மை பொறியியல் (தொழில் நுட்ப இயந்திரம்) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூர் அருகே வல்லாபுரத்தில் உள்ள ரோவர் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் பிரியா, திவ்யா, பிரியதர்ஷினி, சசி,பிரியங்கா, பிரனதி, பொழிலரசி, வெங்கடேஷ்வரி, ராஜகுமாரி ஆகியோர் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வேளாண்மை கருவிகளானநெல் சாகுபடி இயந்திரம், கரும்பு சாகுபடி இயந்திரம்,விதை நடவுஇயந்திரம், களை எடுக்கும்இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்களை இயக்கும் முறைகள் பற்றியும், அதன் பயன்பாடுகள் பற்றியும்எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ஒகளூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.