பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட வேப்பந்தட்டை தாலுகா வ.களத்தூர் காவல் நியைலத்திற்கு புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.
விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்பி சோனல்சந்திரா தலைமை வகித்தார்.மங்களமேடு சரக டிஎஸ்பி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் நீண்ட காலமாக வாடகை கட்டடத்தில் இயங்கிய வி.களத்தூர் போலீஸ் டேஷனுக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.
விழாவில் தாசில்தார் தமிழ்ச்செல்வன், மங்களமேடு இன்ஸ்பெக்டர் சிட்ரிக்மேனுவேல், வி.களத்தூர் எஸ்.ஐ., விவேக், வருவாய் ஆய்வாளர் முத்துமுருகன், ஊராட்சித்தலைவர்கள் நூருல்ஹிதா, சின்னசாமி, பச்சையம்மாள், மருதாம்பாள் மற்றும் முக்கியஸ்தர்கள் முகஹமது இஸ்மாயில், பரணிகுமார், கருணாநிதி மற்றும் போலீசார் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.