பெரம்பலூர் மாவட்ட வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூர் சிறுபான்மை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடந்த இரண்டு நாட்களாக ஏற்பாடு செய்தனர். அதனை தொடர்ந்து, அனைத்து சிறுபான்மை வியாபாரிகள் வழங்கிய தொகை 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வியாபார சங்க நிர்வாகிகள் கொண்டு சென்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஆண்டிக்குப்பம், சாமியார்தர்கா கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகவே சென்று நிவாரண பொருள்களை வழங்கி உதவினர்.