MDMK Vaiko appealed to Supreme Court to oppose the order of the Green Tribunal in the Sterlite case!
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையினால் காற்று, நீர், நிலம் மாசுபடும் என்றும், அதனால் அப்பகுதி மக்களின் உடல்நலனுக்கு பெருங் கேடு விளையும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நீதிமன்றங்களிலும், மக்கள் மன்றத்திலும் கடந்த 22 ஆண்டுகளாக பொதுமக்கள் நலனுக்காக போராடி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 15.12.2018 அன்று டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை எதிர்த்து இன்று 07.01.2019 உச்சநீதிமன்றத்தில் வைகோ மேல் முறையீடு செய்துள்ளார்.