பெரம்பலூர்: பெரம்பலூர் ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா கோயில் வருடாபிஷேக விழா இன்று திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்சி- சென்னை தோசிய நெடுஞ்சாலையில் உள்ள தீரன்நகர் எதிரே ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா கோயில் மற்றும் தியான மண்டபத்துக்கு கடந்த 22.6.2014 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதற்கான வருடாபிஷேக விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து முளைப்பாரி மற்றும் பால் குடங்கள் எடுக்கும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து, சாய்பாபாவுக்கு பால் அபிஷேகமும், மகா கணபதி ஹோமமும், முதல்கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.
திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மகா அபிசேகமும், சங்காபிசேகமும், மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்காரமும், ஆரத்தியும் நடைபெற்றறது. இந்த விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள்கிழமை இன்று இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது.