பெரம்பலூர்: வரும் ஜுலை 1 தேதி முதல் இரு சக்கர வாகனம் ஓட்டுடுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு பிறத்துள்ளது.
இதனையொட்டி பெரம்பலூர் நகர போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு, மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் இன்று வழங்கினர்.