சென்னை : ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் கோபாலகிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஹெல்மெட் அணியாவிட்டால் வாகன ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற உத்தரவு பலவித பாதிப்புக்களை ஏற்படுத்தும் எனவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.