திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சிறுவன் லோகேஷ், பத்து நிமிடங்களில் ஐம்பது வகையான யோகாவை செய்து சாதனை நிகழ்த்தினார். ஆறாம்வகுப்பு பயின்று வரும் லோகேஷ், தனது மூன்றாவது வயதிலேயே யோகா கலையை பயில ஆரம்பித்துள்ளார். மாநில, தேசிய அளவிலான யோகா போட்டிகளில் முதலிடம் பிடித்துள்ள இவர், அண்மையில் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பத்து நிமிடங்களில் ஐம்பது வகையான யோகாவை செய்து சாதனை நிகழ்த்தினார்.