பெரம்பலூர்: பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் 4 மணிநேர கூடுதல் வேலைக்கு ஊதியம் சேர்த்து வழங்க வேண்டும், தீபாவளி போனஸ் அரசு வழங்கும் பண்டிகைக்கால தொகையா அல்லது ஜிவிகே நிறுவனம் வழங்கிய ஊக்கத்தொகையா என்பதை தெளிவு படுத்தவேண்டும் தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன் 108 ஊழியர்கள் பல்வேறு கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆம்புலன்ஸ் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் டி.கோபி தலைமை வகித்தார். துணைத்தலைவா; எஸ்.சசிகுமார், மாவட்ட செயலாளர் பி.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை, சிபிஐ மாவட்ட செயலாளா; வீ.ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் விவசாய தொழிலாளர் சங்கம் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்ட சிறப்புரையாற்றினர்கள் . சிஐடியூ மற்றும் ஆட்டோ கார் ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆம்புலன்ஸ் ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் வி.ஜெயராஜ் நன்றி கூறினார்.