சென்னை : 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடபுத்தகங்களில் தட்டுப்பாடு உள்ளதாக மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதனால், தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
அரசு விநியோகிக்கும் பாட புத்தகங்களை தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலகத்தில் வாங்கி செல்கின்றனர்.
இந்த ஆண்டு, புத்தகங்களில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால், பல மணிநேரம் காத்திருந்தும் புத்தகம் இல்லாமல் திரும்புவதாக பெற்றோரும் மாணவர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.
ஒரே கவுண்டரில் புத்தங்கள் வழங்குவதால், பல மணிநேரம் வரிசையில் நிற்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சில வாரங்களில் முதல்கட்ட தேர்வு துவங்குவதால், புத்தக தட்டுப்பாடு மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, அரசு பள்ளிகளில் திரும்பபெறப்பட்ட பொருளாதாரம் மற்றும் வரலாறு புத்தகங்களும் இன்னும் விநியோகிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.