பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்குட்ப்பட்ட 11 நரிக்குறவ இனமக்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் முகாமில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்ப்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் ஆலத்தூர் வட்டத்திற்குப்பட்ட காரை கிராமத்தை சார்ந்த 11 நபர்களுக்கு நரிக்குறவர் நல வாரியத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் வழங்கினார்.
மேலும் இந்நலவாரியத்தின் மூலமாக இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 269 நபர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.