20-வது தேசிய இளைஞர் விழாவிற்கு வீரர், வீராங்கனைகள் தேர்வுப்போட்டி பெரம்பலூரில் வரும் டிச 2.ம் தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.

20-வது தேசிய இளைஞர் விழா சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நகரில் எதிர்வரும் 12.01.2016 முதல் 16.01.2016 வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட அளவிலான 20-வது தேசிய இளைஞர் விழா 02.12.2015 அன்று பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாட்டு, ஓரங்க நாடகம்(ஆங்கிலம் அல்லது ஹிந்தி) , கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம், பேச்சுப்போட்டி, ஹார்மோனியம், மிருதங்கம், புல்லாங்குழல், வீணை, சிதார், கிடார், தபேலா, மணிப்புரி நடனம், பரதநாட்டியம், குச்சுப்புடி, கதக் மற்றும் ஒடிஸி நடனம் ஆகிய நடனப்போட்டிகள் நடைபெற உள்ளது.

இத்தேர்வுப் போட்டியில் மாவட்ட அளவிலான இளைஞர் விழாவில் 13 வயது முதல் 25-வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் வயதுச்சான்றிதழ் பெற்று வரவேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இத்தேர்வுப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்.

மாவட்ட அளவிலான இளைஞர் விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு பயணப்படியோ, தினப்படியோ மாவட்ட விளையாட்டுப் பிரிவின் மூலம் வழங்கப்பட மாட்டாது.
மாவட்ட அளவிலான போட்டியில் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவோர் மாநில அளவிலான தேர்வுப்போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர், மாநில அளவிலான தேர்வுப்போட்டிகள் 07.12.2015 அன்று திருச்சி மாவட்டத்தில் நடைபெறும். அதில் சிறந்த ஆடவர் மற்றும் மகளிர் 100 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நகரில் நடைபெற உள்ள 20-வது தேசிய இளைஞர் விழாவில் தமிழ்நாட்டின் சார்பாக கலந்து கொள்வார்கள். எனவே இப்போட்டிகளில் அதிக அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர;பு அலுவலர;, பெரம்பலூர;.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!