பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

perambalur-sp-office பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் நடந்த 8 கொலை வழக்குகளில் 7 கொலை வழக்குகளில் எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் காவல் துறையினரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்கிரிகள் மற்றும் சந்தேக நபர்களை தடுப்பு கைது செய்ததாலும், தொடர்ச்சியாக இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டதாலும் கடந்த 2014 ம் ஆண்டு 13 கொலை சம்பவங்களைவிட இந்த ஆண்டு கொலை சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது.

12 வழிப்பறி சம்பவங்களில் 8 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் காவல் துறையின் சீரிய முயற்சியால் கடந்த 2014 ம் ஆண்டு 14 வழிப்பறி சம்பவங்களைவிட இந்த ஆண்டு 12 ஆக குறைந்துள்ளது.

வாகன விபத்தை தடுக்கும் பொருட்டு போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் 27 ஆயிரத்து 463 நபர்கள் மீதும், குடிபோதையில் வாகனம் ஒட்டியவர்கள் மீது 327 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் ரூ. 29 லட்சத்து 09 ஆயிரத்து 015- அபராதத் தொகையாகப் பெற்று நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கையால் இருசக்கர வாகன விபத்துகளில் விழுந்து இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட வெகுவாக குறைந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு விபத்து வழக்குகளை விட இந்த ஆண்டு வெகுவக குறைந்தள்ளது.

2015-ஆம் ஆண்டு 12 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்திலும், 3 நபர்கள் மீது மதுவிலக்கு தடுப்புக் காவல் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆண்டை விட கூடுதலாக 3 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிராக குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

70 வழக்குகள் காணாமல் போனவர்கள் குறித்து வழக்கு பதிவு செய்து, அதில் 57 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் மீது ஆயிரத்து 799 வழக்குகள் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 601 பிடியாணைகள் நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்டு அதில் 538 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

2015- ஆம் ஆண்டில் ரூ.1 கோடியே11 லட்சத்து 72 ஆயிரத்து 584 – மதிப்புள்ள சொத்துகள் களவு போனதில் ரூ.1கோடியே 81 ஆயிரத்து 613 – மதிபபுள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகளின் சதவீதம் 77 சதவீதம். சொத்துக்கள் மீட்கப்பட்ட சதவீதம் 90 சதவீதம். மேலும் கடந்த ஆண்டை விட மீட்கப்பட்ட சொத்துகளின் விகிதம் வெகுவாக உயர்ந்துள்ளது, என அவரது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!