2015-2016 ஆம் ஆண்டின் இரண்டாவது காலண்டிற்கான வட்டார அளவிலான வங்கியாளர் களின் கூட்டம் பெரம்பலூர் வட்டத்திற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் (பொ) அருள்தாசன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசியமயமாக்கபட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் மாநில அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களான தாட்கோ, மாவட்டதொழில்மையம், கால்நடைதுறை, புதுவாழ்வு திட்டம், மகளிர்திட்டம், சமூகபாதுகாப்பு நலதிட்டம், வேளாண்மைதுறை மற்றும் ஊரக வளர்ச்சிதுறை ஆகிய துறைகளின் மூலம் செயல்படுத்தபட்டு வரும் திட்டங்களில் வங்கியாளர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அனைத்து துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் வங்கியாளர்களிடம் கடன் விண்ணப்பங்களின் நிலைப்பாட்டினை குறித்து தகவலை தெரிவித்தனர்.

இதனை கருத்தில் கொண்டு வங்கியாளர்கள் அனைத்து விண்ணப்பங்களையும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்வதாக தெரிவித்தனர்.

அரசு துறை அலுவலர்கள் தங்கள் துறைகளின் திட்டங்களை பற்றி வங்கியாளர்களிடம் விரிவாக எடுத்து கூறினார்.

சமூக பாதுகாப்பு நலத்திட்ட துணை ஆட்சியர் பேசுகையில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் வங்கி கணக்குகள் துவங்குதலை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், வங்கி வணிக சேவையாளர்களை தேவையான கிராமங்களில் பணி நியமனம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வங்கியாளர்களிடம் நடைபெற்று கொண்டிருக்கன்ற பயிர்கடன் முகாமில் இருந்து பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் தகுதியின் அடிப்படையில் கடன் வழங்குமாறும், மற்றும் நடைபெற இருக்கின்ற கல்விகடன் முகாமிலும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்திரா நினைவு குடியிருப்பு மற்றும் பசுமை வீடு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் கூடிய விரைவில் விரைந்து கடனளிக்குமாறும் கூறினார்.
பிரதம மந்திரி காப்பீட்டு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யபட்டது.

மேலும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற இருக்கின்ற சிறப்பு கூட்டத்தில் ஆயுள் மற்றும் விபத்துக் காப்பிட்டு திட்டத்தில் மக்களை பங்களிக்குமாறு அனைத்து வங்கிகளும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுகொள்ளபட்டது.

இக்கூட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பெரம்பலூர் முதன்மை மேலாளர் பத்மநாபன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் நவீன்குமார், பெரம்பலூர் மாவட்ட கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் பார்த்தசாரதி ,

மகளிர் திட்டம் திட்ட அலுவலர் வெங்கடேசன் , மாவட்ட தொழில்மையம் தனபால், மாவட்ட மேலாளார் வெங்கடேசன், மனோகரன் இணை இயக்குனர் கால்நடைபராமரிப்பு துறை, சமூக பாதுபாப்பு நலத்திட்ட துணை ஆட்சியர் முருகேஸ்வரி, பெரம்பலூர் வட்டாட்சியர், வேளாண்மை துறை மற்றும் அனைத்து வங்கியாளர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனா;.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!